NPL – Eliminator போட்டியில் அபார வெற்றியீட்டிய Vavuniya Vikings 

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது Qualifier போட்டிக்கு Vavuniya Vikings அணி தகுதி பெற்றுக்கொண்டது. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(26.05) நடைபெற்ற Mannar Kings அணிக்கு எதிரான Eliminator போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக Vavuniya Vikings அணி இறுதிப்போட்டிக்கு தெரிவானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Mannar Kings அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. சீரற்ற வானிலையின் காரணமாக போட்டி 16 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Vavuniya Vikings அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் பரமசிவம்பிள்ளை நிஷாந்தன் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். Mannar Kings அணி சார்பில் பந்துவீச்சில் எஸ் சுஜன் மெய்யாஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

125 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Mannar Kings அணி 13.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்ததுடன் தொடரிலிருந்து வெளியேறியது. Vavuniya Vikings அணி சார்பில் பந்துவீச்சில் எஸ் பானுஷன் 3 விக்கெட்டுக்களையும், கே கிருஷிகன், சிவநாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் Vavuniya Vikings அணி 51 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், தொடரின் இரண்டாவது Qualifier போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக Vavuniya Vikings அணியின் எஸ் பானுஷன் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் இரண்டாவது Qualifier போட்டியில் Vavuniya Vikings மற்றும் Mullai Panthers அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version