சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பென்றின் போது தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 30ம் மற்றும் 31ம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.