உயிருடன் மண்ணுக்குள் புதைந்த 2,000 பேர் – பப்புவா நியூ கினியாவில் பேரிடர் 

பப்புவா நியூ கினியாவில் உள்ள கிராமமொன்றில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 2,000க்கு அதிகமானோர் மண்ணுக்கடியில் புதையுண்டுள்ளனர். பப்புவா நியூ கினியாவினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்று(27.05) திங்கட்கிழமை அனுப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நிலச்சரிவு காரணமாக 2,000க்கு அதிகமான மக்கள் உயிருடன் புதைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம், தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திடம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்திலுள்ள தொலைதூர மலைக் கிராமம் ஒன்றில், கடந்த 24ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் முங்காலோ எனும் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், வீடுகளினுள் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணுடன் புதையுண்டுள்ளனர். 

நிலச்சரிவின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் தோட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதான நெடுஞ்சாலை தடைபட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்கு இன்று(27.05) கிடைக்கப்பெற்ற கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவின் தற்போதைய நிலைமை நிலையற்றதாக இருக்கின்றமையினால், மீட்பு பணியில் ஈடுபடும் குழுக்களுக்கும், மண்ணில் புதையுண்டு உயிர் பிழைத்திருக்க கூடியவர்களுக்கும் ஆபத்தான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version