ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 03 நிறுவனங்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 03 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவற்றில் 02 வௌிநாட்டு நிறுவனங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்காக விலைமனு கோரலை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் விலைமனுக்கோரல் சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக விலைமனு கோரலை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலப்பகுதி, கடந்த மார்ச் 05ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதியை 45 நாட்களால் நீடிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கான முதலீட்டாளரைக் கண்டறிவதற்காக 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் பெறுமதியை குறைப்பதற்கு உலக வங்கியின் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் எனப்படும் IFC நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version