வாகன இறக்குமதிக்கு மத்திய வங்கி சாதகமான பதில் 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிப்பதாக இருந்தால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக தளர்த்துவது முக்கியமான தீர்மானம் எனவும், அந்நியச் செலாவணியை மத்திய வங்கியால் நிர்வகிக்க முடியும் என்றும் நேற்று(28.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

மேலும், மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை மாற்றாமல் பேணுவதற்கு தீர்மானித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply