இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக தலைவர்

பாதாள உலக தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு மிதிகம ருவனை டுபாயில் இருந்து அழைத்து வந்துள்ளது.

அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ‘ஹரக் கட்டா’ அல்லது நதுன் சிந்தகவை விடுவிக்க திட்டமிட்டவர் மிதிகம ருவன் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version