ரவி சாஸ்திரிக்கு கொரோனா, முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கட் அணியின் தலமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்றுவிப்பளர் பரத் அருண், உடலியக்க நிபுணர் நித்தீன் பட்டேல், களத்தடுப்பு  பயிற்றுவிப்பாளர் ஶ்ரீதர்,  ஆகிய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட்  கட்டுபபாட்டுச் சபை அறிவித்துள்ளது. ரவிசாஸ்திரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து  அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  பாதுகாப்பின்  நிமிர்த்தமே மற்றைய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். PCR முடிவுகளில் கொரோனாஉறுதி செய்யப்படின் அவர்கள் விடுதியில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவாரகள். மீண்டும் PCR முடிவில்கொரோனா இல்லை என உறுதியானதும் அணியுடன்  இணைவார்கள். நடைபெறும் போட்டிக்கு எந்தபாதிப்புமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கு இந்தியா அணி செவ்வாய்க்கிழமை மென்செஸ்டருக்கு செல்லவுள்ளது.

ரவி சாஸ்திரிக்கு கொரோனா, முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version