2 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது Jaffna Gladiators

Jaffna Gladiators மற்றும் Mullai Panthers அணிகளுக்கிடையில் இன்று (02.06) நொர்தேர்ன் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் Jaffna Gladiators அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய யாழ் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. இதில் சுதர்ஷன் சுபர்ணன் 41(22) ஓட்டங்களையும், நவரத்தினம் திரிஷிகன் 39(24) ஓட்டங்களையும், இ. டிலக்சன் 38(35) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அருணோதயம் அஞ்சயன் 4 விக்கெட்களையும், கபிலன் மகேந்திரன் 3 விக்கெட்களையும், எஸ். ரகுலன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடிப்பாடிய முல்லைத்தீவு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. இதில் பெரியசாமி ரூபன் 50(35) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜெயபாலசிங்க ஜனந்தன், எஸ். கஜானன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக சுதர்ஷன் சுபர்ணன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரின் நாயகனாக அருணோதயம் அஞ்சயன் தெரிவு செய்யப்பட்டார். (15 விக்கெட்டுகள், 177 ஓட்டங்கள், 5 பிடிகள்)

சிறந்த துடுப்பாட்ட வீரராக இ. டிலக்சன் தெரிவு செய்யப்பட்டார். (189 ஓட்டங்கள்)

சிறந்த பந்துவீச்சாளராக அருணோதயம் அஞ்சயன் தெரிவு செய்யப்பட்டார். (15 விக்கெட்டுகள்)

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய தெரிவுக்குழு உறுப்பினருமான அஜந்த மென்டிஸ் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

Social Share

Leave a Reply