டி20 உலகக் கிண்ணத்திற்கு வரலாற்று பரிசுத்தொகை  

டி20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கிண்ணத்துடன், உலக கிண்ண வரலாற்றிலேயே அதிக்கூடிய பரிசுத்தொகையைப் பெற்றுக் கொள்ளும். 

உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அல்லது 2ம் இடத்தை கைப்பற்றும் அணிக்கு 1.28 மில்லியனை அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடையும் இரு அணிகளும் தலா 787,500 அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும். 

மேலும், சூப்பர் 8 சுற்றிலிருந்து வெளியேறும் நான்கு அணிகள் தலா 382,500 டொலர்களையும், 9வது, 10வது, 11வது மற்றும் 12வது இடங்களில் தொடரை நிறைவு செய்யும் அணிகள் தலா 247,500 டொலர்களை பெற்றுக்கொள்ளும். தொடரில் பங்கேற்ற ஏனைய அணிகளுக்கு தலா 225,000 டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை தவிர்த்து ஏனைய போட்டிகளில் அணிகள் பெற்றுக்கொள்ளும் ஓவ்வொரு வெற்றிக்கும் 31,154 டொலர்கள் வழங்கப்படவுள்ளது.  இதற்கமைய டி20 உலகக் கிண்ண வரலாற்றிலேயே மொத்தமாக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனும் அதி கூடிய பரிசுத்தொகை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Social Share

Leave a Reply