இந்திய மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில்
நாடளாவிய ரீதியில் இன்று வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி,இன்று காலை 08 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த சனிக்கிழமை
வரை (01.06), மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் 07 கட்டங்களாக நடைபெற்றன.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
கருத்து கணிப்புகளின் பின்னர் பா.ஜ.க முன்னிலை வகிப்பதாக கூறப்படுகின்றது.