மொட்டுக் கட்சியின் முக்கிய பதவி ரோஹித அபேகுணவர்தன வசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் செயற்குழு இன்று (07.06) காலை கூடியதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் செயற்குழு இன்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.

Social Share

Leave a Reply