போரில் குழந்தைகளை பாதுகாக்க தவறிய குற்றச்சாட்டில் இஸ்ரேலை கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்டோனியோ குட்டெரஸின் இந்த நடவடிக்கை நியாயமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த வெட்கக்கேடான நடவடிக்கை குறித்து தான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன்” என் இஸ்ரேலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் தெரிவித்துள்ளார்.