டி20 உலகக்கிண்ணம்: தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது நெதர்லாந்து

டி20 உலகக் கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியீட்டியது. அமெரிக்கா, நியூயார்க்கில் இன்று(08.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நெதர்லாந்து அணி சார்பில் சைபிரண்ட் ஏங்கல்பிரெக்ட் 40 ஓட்டங்களையும், வேன் பீக் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பந்து பார்ட்மேன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

104 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. அதன் பின்னர் நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் விவியன் கிங்மா, லோகன் வான் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply