பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பதவி விலகியுள்ளார்.
தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது எதிர்பாராத முடிவு. இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்.
நான் எனது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்” என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது அவர் கண்ணீரில் விடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.