டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுக்கொண்டது. நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியீட்டியதன் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை உறுதி செய்து கொண்டது. மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில் இன்று(12.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 17 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. நமீபியா அணி சார்பில் அணித்தலைவர் எரஸ்மஸ் 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் அடம் சம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
73 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 34 ஓட்டங்களையும், டேவிட் வார்னர் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலியா அணியின் அடம் சம்பா தெரிவு செய்யப்பட்டார்.