பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை வலுப்படுத்தி தண்டனைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் சான்றிழித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.