பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகினர்

வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரங்களில் தெகிடி, மேயாத மான், லிப்ட், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில்
நடித்த பிரதீப் K.விஜயன் உயிரிழந்தார்.

பாலவாக்கம், சங்கராபுரத்தில் வசித்து வந்த இவர் நேற்று (12.06) முதல் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால்,
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் உயிரிழந்த நிலையில் குளியலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது தலையில் காயமும் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவர் இரண்டு தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இறுதியாக அவர் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பப்பு என அழைக்கப்படும் பிரதீப் விஜயன், 2013 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Social Share

Leave a Reply