திரித்துவக் கல்லூரியின் ரக்பி வீரர் உயிரிழப்பு..! 

கண்டி, திரித்துவக் கல்லூரியின்(Trinity College) ரக்பி வீரரான ஷபீர் அஹமட் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக  திரித்துவக் கல்லூரி அறிவித்துள்ளது. 

கடுமையான நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 19 வயதான ஷபீர் அஹமட்டின் உடல் உறுப்புகள் செயலிழந்தமையினால், மாணவன் உயிரிழந்ததாக திரித்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை அரலிய ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“எங்கள் நேசத்துக்குரிய மாணவர்களில் ஒருவரும் ரக்பி வீரருமான ஷபீர் அஹமட் உயிரிழந்ததை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். ஷபீர் அஹமட், கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளமையினால் உயிரிழந்துள்ளார்.” 

“இந்த இழப்பு ஷபீரை அறிந்த அனைவராலும் ஆழமாக உணரப்படுகிறது, இத்தகைய கடினமான சூழ்நிலையில் ஷபீரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version