மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாள் முடிவுகள்

சின்கல விளையாட்டுக்கழகம் (SSC) மற்றும் ஏஸ் கப்பிட்டல் கிரிக்கெட் கழகம் (ACCC) அணிகளுக்கிடையில் நேற்று (13.06) மேஜர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டி இலங்கை இராணுவப்படை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏஸ் கப்பிட்டல் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SSC அணி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெட்றது. இதில் திமுத் கருணாரட்ன 79 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் தனுக்க தாபரே 3 விக்கெட்களையும், சம்மு அஷான், ரவிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஏஸ் கப்பிடல் அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. இதில் பவந்த வீரசிங்க ஆட்டமிழக்கமால் 79 ஓட்டங்களையும், சம்மு அஷான் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரமோத் மதுசான் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தமிழ் யுனியன் கிரிக்கெட் கழகம் மற்றும் நிகொம்பு கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று மேஜர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி கட்டுநாயக்கவில் மழை காரணமாக 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ் யுனியன் அணி டக்வத் லுவிஸ் முறையில் 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிகொம்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தமிழ் யுனியன் அணி 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 184 ஓட்டங்களை
பெற்றது. இதில் சந்துன் வீரக்கொடி 39 ஓட்டங்களையும், மொஹமட் ஷமாஷ் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டில்ஷான் முனவீர, சணுர பெர்ணாண்டோ, பசிந்து உஷேத்திகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நிகொம்பு அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷெஷான் பெர்ணான்டோ 34 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் தீசன் விதுஷன், தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் அத்லெடிக் கழகம் மற்றும் ராகம கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று மேஜர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி கொழும்பு புளூம்பீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டியும் மழை காரணமாக 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் புளூம்பீல்ட் அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய புளூம்பீல்ட் அணி 26 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது. இதில் லஹிரு மதுஷங்க 66 ஓட்டங்களையும், சச்சித ஜயதிலக்க ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சந்துஷ் குணதிலக்க, நிபுண் மலிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ராகம அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. இதில் புளின தரங்க 69 ஓட்டங்களையும், ரவிந்து செம்புக்குட்டி ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்றனர். ட்ரவின் மதியுவ் 3 விக்கெட்களையும், இசித்த விஜேசுந்தர 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

கொல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் குருநாகல் யுத் கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று மேஜர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி குருநாகலில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொலட்ஸ் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்ட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய குருநாகல் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஷ்மிக மதுஷங்க 42 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்ட்ஸ் அணி 29.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவிந்து ரசந்த 57 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தரிந்த விஜேசிங்க 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதுரெலிய விளையாட்டுக் கழகம் மற்றும் கண்டி கஸ்டம்ஸ் கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (13.06) மேஜர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டி மாகொன்னவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கண்டி கஸ்டம்ஸ் அணி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பதுரெலிய அணி 43.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. இதில் சசங்க நிர்மல் 45 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் உஸ்மன் இஷாக் 4 விக்கெட்களையும், அகில டில்ஷான், கௌமல் நாணயக்கார ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய கண்டி கஸ்டம்ஸ் அணி 40.5 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது. இதில் நடுன் டில்ஷான் 32 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சதீப் கவிஷ்க 3 விக்கெட்களையும், அலங்கர அசங்க சில்வா, சசங்க நிர்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் (PSC) அணிகளுக்கிடையில் நேற்று மேஜர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி P. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மழை காரணமாக 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் CCC அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொலிஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய CCC அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. இதில் அஷான் பிரியன்ஜன் 47 ஓட்டங்களையும், சொனால் டினுஷ 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சருக்க ப்ரமோட், தமித் கப்பகொட ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், திலும் சுதீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பொலிஸ் அணி 30 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. இதில் தனுஜ இந்துவர 43 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா 4 விக்கெட்களையும், சமிந்து விஜேசிங்க, டுவிந்து ரணதுங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version