கெஹெலியவிற்கு மற்றுமொரு நெருக்கடி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக வாகன முறைகேடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அவர் சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை மீள கையளிக்காமை தொடர்பில் சிவில் பிரதிநிதியொருவர் ஆணைக்குழு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

2022ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது பணிக்குழாமினருக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் சிலவற்றை 2023ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் பயன்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பின்னர் வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும் அமைச்சர் பதவியிலிருந்து கெஹெலிய ரம்புக்வெல்ல விலகிய பின்னரும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் 24 ஆம் திகதி சுகாதார அமைச்சிற்கு கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply