மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழக்கும் நாய்கள் மற்றும் காகங்கள்…

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென உயிரிழக்கின்றமை மிகவும் வேதனையளிக்கிறது.

நாய்கள் வீட்டிலிருந்து வெளியில் சென்றன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றன.

இதுவரை 8 நாய்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை  கவலைக்கிடமாக உள்ளது.
குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் எவறேனும் நஞ்சு கலந்த உணவை வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென
நாய்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version