உத்திகவினால் விசா விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்த விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்
வெளி நாடுகளுக்கான விசா வழங்குவதில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய
நாடுகளுக்கான விசா வழங்குவதில் சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வெளிநாடுகளுக்கு விசா கோரி விண்ணப்பிக்கும் பல இலங்கையர்கள் விசா
பெறுவதற்கு சுமார் ஒருவார காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்து வரும் நிலையில்
தகவல்களை சரியான முறையில் ஆராய்ந்து இலங்கையர்களுக்கு விசா வழங்குமாறு பல வெளிநாட்டு தூதரகங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

உத்திக பிரேமரத்ன வாகனம் மீது அவரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்
கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கனடாவில் தஞ்சம் கோரியமையும் விசாரணைகளில் தெரியவந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version