சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பாடமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் எதிர்வரும் 26ம் திகதி புதன்கிழமை சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
சுபோதினி குழுவின் அறிக்கையின்படி மூன்றில் ஒரு பங்கு சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ள போதும், எஞ்சிய சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு சம்பள அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் பதிலளிக்காத பட்சத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.