பாடசாலை கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் நாளை(24.06) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. 

சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. 

நாளை(24.06) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என குறித்த சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இதேவேளை, அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை(24.06)  முதல் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply