சரத் பொன்சேகாவை விமர்சித்த கட்சியின் தேசிய அமைப்பாளர்

கட்சியுடன் சில முரண்பாடுகள் காணப்படுகின்ற போதும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்ற போதும் சரத் பொன்சேகாவை போன்று பொறுப்பற்ற விதத்தில் செயற்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க இன்று(24.06) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியுடன் முரண்பாடுகள் காணப்படுகின்ற போது, நிர்வாகக் குழு கூட்டத்தில் அல்லது செயற்குழு கூட்டங்களில் முரண்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், கட்சியின் தலைமையை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக விமர்சித்த சரத் பொன்சேக்காவின் செயலை அங்கீகரிக்க இயலாது என சுட்டிக்காட்டியுள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர், இந்த விடயம் தொடர்பில் கட்சியின் நிர்வாக குழு விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்தின ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பாராட்டி கருத்துக்களை வெளியிட்டதையும், ஹிருனிகா பிரேமச்சந்திர தான் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய திஸ்ஸ அத்தநாயக்க, குறித்த இருவரும் சரத் பொன்சேக்காவை போன்று பொறுப்பற்ற விதத்தில் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply