கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி

உரிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று(24.06) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். 

உரிய அதிகாரிகளுக்கு, இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 

குறித்த ஒப்பந்தங்கள் தொடர்பிலான விபரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply