![லசந்த படுகொலை - சட்ட மாஅதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு தொடர்பில் கடமை தவறிய சட்ட மாஅதிபருக்கு எதிராக
குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகளின்
சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட மூவரை விடுவிப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்ட மாஅதிபர்
பாரிந்த ரணசிங்க எடுத்த நடவடிக்கை குறித்து அவர் கவலை வௌியிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் தற்செயலானது அல்ல என்பது கடந்த வாரத்தில் இடம்பெற்ற விடயங்களில்
தௌிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைகள் தீவிரமாக அல்லது நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை
எனவும் அஹிங்சா விக்ரமதுங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட மாஅதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை முன்வைத்து அவரை பதவிநீக்கம் செய்வதே நீதிக்கான
அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி எனவும் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.