பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானியை சவாலுக்குட்படுத்திய மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அரசாங்கத்தால் அண்மையில் வர்த்தமானி வெளியிட்டப்பட்டது.
தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அந்த மனு மீதான விசாரணை இன்று (26.6) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபிதராஜ கருணா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பில் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பினரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டது.
இதன்பின்னர் இந்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
மேன்முறையீட்டு நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.