இலங்கை அணியின் பயிற்சிவிப்பாளர் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் அணியின்  தலைமைப் பயிற்சிவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

“சர்வதேச பயிற்சிவிப்பாளராக செயற்படுவதனால் குடும்பத்தினரிடமிருந்து நீண்ட காலம் விலகி இருக்க வேண்டியுள்ளது. எனது குடும்பத்தினருடனான நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு, நான் வீடு திரும்புவதற்கும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கும் தீர்மானித்துள்ளேன்” என சில்வர்வுட் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய பதவிக்காலத்தின் போது இலங்கை அணி வீரர்கள், ஏனைய பயிற்சிவிப்பாளர்கள்  மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஆதரவுக்கு கிறிஸ் சில்வர்வுட் நன்றி தெரிவித்துள்ளார். 

கிறிஸ் சில்வர்வுட் பதவிக்காலத்தின் போது இலங்கை அணி 2022ம் ஆண்டு டி20 ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியதுடன், 2023ம் ஆண்டு 50 ஓவர் ஆசிய ஆசிய கிண்ணத்தின் இறுதிப் போட்டியை எட்டியது. மேலும் இலங்கை அணி பல்வேறு கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

கிறிஸ் சில்வர்வுட்டின் பதவி காலத்தின் போது அவர் ஆற்றிய பங்களிப்புக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நன்றி தெரிவித்துள்ளதுடன், அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply