இந்த வருடத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் தலைவராக ஆப்கானிஸ்தான் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரும், முன்னாள் தலைவருமான மொஹமட் நபி நியமிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் நபியின் அனுபவமும், அவரின் கடந்த கால சாதனைகளும், அணி தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணங்களாகும் என தம்புள்ளை அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் நபியின் தலைமைத்துவமும் அனுபவமும் அணிக்கு சிறந்த உத்வேகத்தை வழங்கும் என தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் உரிமையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2024 ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
