லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆர்மபிக்கவுள்ளது. இது ஐந்தாவது LPL ஆகும். இன்று ஆரம்பிக்கவுள்ள தொடரை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் இந்த வருடத்துக்கான தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். நேர்முக வர்ணனைகளிலும் அவர் கலந்துகொள்ளுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

இன்றைய முதற் போட்டி பி லவ் கண்டி மற்றும் தம்புள்ள சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. நாணய சுழற்சி 7 மணிக்கு நடைபெற்று போட்டி 7.30 இற்கு ஆரம்பிக்கும். லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வு மாலை 6.15 இற்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பம்

Social Share

Leave a Reply