ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். இலகுவில் தீர்ப்பு கிடைக்காது – மனோ MP

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். அங்கே வழக்காடத்தான் அதிக சந்தர்ப்பம். இலேசில் தீர்ப்பு கிடைக்காதுஎன பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள பதிவில் மனோ MP மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“தீர்ப்பு கிடைப்பதை, பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களின் தேசிய நலன்சார் விடயங்கள், New World Order என்ற புத்துலக உலக அமைப்பு ஆகியவை தடுத்து கொண்டே இருக்கும்.
ஆகவே நாம் தீர்ப்பு என்ற பழம் விழும் என்று மேலே வானத்தை பார்த்து கொண்டே இருப்போம். ஆனால், பழம்சுலபத்தில் விழாது.
அதற்காக ஐநா சபை பயனற்றது என்பதல்ல. இந்த வழக்காடு மன்றத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அதில்தான் பயன் என்ற பலன் இருக்கிறது.
அதற்கு அங்கே நமது தரப்பின் பரப்பு விரிவடைய வேண்டும். அதுவே நமது வீச்சை அதிகரிக்கும். உரிய தேசிய, சர்வதேச ஏற்புடைமையும் கிடைக்கும். ஆனால், அங்கே நமது தரப்பு விரிவடைந்து, வீச்சு அதிகரிப்பதை விடுத்து, சுருங்கி குறைவது எமதுதூரதிஷ்டம்.
ஆகவே, கவலை படுவோம். கவலைப்பட தமிழர்களுக்கு கற்றுத்தர வேண்டுமா, என்ன?”

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். இலகுவில் தீர்ப்பு கிடைக்காது - மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version