தொழிற்கட்சி மாபெரும் வெற்றி

2024 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி
மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (05.07) நடைபெற்றது.

பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ்
கட்சி படுதோல்வியடையும் எனவும் தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெறும் எனவும் முன்னதாகவே கருத்துக் கணிப்புகள் கூறின.

இந்நிலையில் பிரித்தானியாவில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு கட்சி 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
அவ்வாறு பெரும்பான்மையை பெரும் கட்சி கட்சியின் தலைவர் பிரதமராக பொறுப்பேற்பார்.

இதன்படி, தொழிற் கட்சிக்கு 410 இடங்களும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 131 இடங்களும், லிபரல் டெமாக்ராட் கட்சிக்கு 61 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.தற்போது தொழிற்கட்சி பெரும்பான்மையான 326 ஐத் தாண்டியது.

பிரித்தானியாவில் தற்போது மாற்றம் ஆரம்பித்துள்ளதாக தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மத்திய லண்டனில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் தொழிற்கட்சி தலைவர் தனது ஆதரவாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழிற்கட்சியின் வெற்றி 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளமை குறிப்பித்தக்கது.

Social Share

Leave a Reply