சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்ததலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை
இன்று (07.07) இடம்பெறவுள்ளது.

அவரது சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை
இடம்பெறவுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் மாதம்
30 ஆம் திகதி இரவு தனது 91 ஆவது வயதில் காலமானார்.

பின்னர், கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனையடுத்து பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு
அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர் திருகோணமலையில் உள்ள அவரது
இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மறைந்த சம்பந்தனது பூதவுடலுக்கு நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ச அஞ்சலி செலுத்தினார்.

சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை நகரினூடாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 03
மணியளவில் இந்து பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று

Social Share

Leave a Reply