அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதம் பெறுமதிசேர் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்
சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்த போதிலும், நிர்ணயிக்கப்பட்ட
விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் முட்டைக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் அது தோல்வியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.