ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவு – மொட்டுக் கட்சி 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அச்சத்தின் காரணமாகவோ அல்லது கடமையின் காரமாகவோ,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்கு தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்கும் என பசில் ராஜபக்‌ஷ தெரிவித்த போதும், குறித்த ஆரதவு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரை நீடிக்கப்படுமா என அவர் உறுதிப்படுத்தவில்லை. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தனது 27 வருட அரசியல் நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே பசில் ராஜபக்‌ஷ இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் கட்சியை விட்டு வெளியேறிய போதும், குறித்த நேரத்தில் நாட்டைக் காப்பாற்ற கூடிய ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என தீர்மானிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஜனாதிபதிக்கான ஆதரவை தொடர்ந்தம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 

Social Share

Leave a Reply