ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்தல் குறித்த மனு விசாரணைக்கு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தலைமை நீதிபதி தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி நேற்று (13.07) உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் அவர் மனுவினூடாக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version