திரிஷாவுக்கு இந்தி படமொன்றில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. சல்மான்கான் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார்.
இந்த படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2010ஆம் ஆண்டில் வெளியான கட்ட மீட்டா இந்தி படத்தில் அக்சய் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
இதனால் இந்தி படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
இதில் திரிஷா நடிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். படப்பிடிப்பு ஸ்பெயினில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
