லங்கா பிரீமியர் லீக் தொடரின் கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான Eliminator போட்டி ஆரம்பமாகியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
தரவரிசையில் முறையே 3ம் மற்றும் 4ம் இடங்களிலுள்ள கொழும்பு மற்றும் கண்டி அணிகள் Eliminator போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலாவது Qualifier போட்டியில் தோல்வியடைந்த யாழ்ப்பாணம் அணியை 2வது Qualifier போட்டியில் எதிர்கொள்ளும்.
சற்றுமுன்னர் நிறைவடைந்த 1வது Qualifier போட்டியில் வெற்றியீட்டிய காலி அணி இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது.
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் – திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, முஹமட் வசீம், இசித விஜேசுந்தர, நிபுன் தனஞ்சய
கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், ரமேஷ் மென்டிஸ், சதுரங்க டி சில்வா, சமத் கோமஸ், மொஹமட் ஹூசைன்