மேலும் சில அத்தியாவசிப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உளுந்து,பால்மா,கோதுமை மா,வெள்ளை சீனி,வெள்ளை அரிசி மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டு கிலோ கிராமொன்றிற்கு 260 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராம் 04 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்
கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version