2 வாரங்களுக்கு சட்டப்படடி வேலை செய்யவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் 

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(22.07) முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதற்கமைய மாகாண கல்வி மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் பதினைந்து நாட்கள் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், அனைத்து வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். 

இதேவேளை, அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஆசிரியர், அதிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version