இலங்கையில் எலோன் மஸ்க்? 

எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

SpaceX நிறுவனத்தின் பிரிவான Starlink இணைய சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த செயல்முறையை துரிதப்படுத்தும் நோக்கில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் செய்யப்பட்டிருந்தது. 

Starlink இன் செயற்பாட்டிற்கு உரிமம் வழங்குவதற்கான அடிப்படை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

இதற்கான பணிகளை நிறைவு செய்ய ஜூலை மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதும், அதற்கு முன்னரே உரிய பணிகளை நிறைவு செய்ய முடியும் எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார். 

எலோன் மஸ்க் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Starlink இணைய சேவைக்கான உபகரணங்களை நிறுவுவதன் மூலம் செயற்பாட்டிற்கான உட்கட்டமைப்பை அமைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதினால், இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 3 வாரங்களின் பின்னரே செயற்பாட்டிற்கு வரும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply