ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன். எங்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய திறமையற்ற அரசியல் குழுக்களினால் 76 ஆண்டுகளாக வழிநடத்தப்பட்டுள்ளோம். இலங்கை வளர்ச்சி அடைவதற்கு ஊழலை நசுக்க வேண்டும். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவாகும்.” என சரத் பொன்சேகா ‘X’ தள பதிவில் தெரிவித்துள்ளார். 

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொரு இலங்கையர்களையும் தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply