இம்மாதத்தின் கடந்த மூன்று வாரங்களில் 120,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 என தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதுடன், குறித்த எண்ணிக்கை 30,442ஆக பதிவாகியுள்ளது.
பிரித்தானியா, சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,138,174 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.