மகளிர் ஆசியக் கிண்ண தொடரில் ஒனபதாவது தடவையாகவும் இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை இந்தியா அணியின்றி இறுதிப் போட்டி ந்டைபெற்றதில்லை. ஒரு தடவை மாத்திரமே அவர்கள் கிண்ணத்தை வென்றதில்லை.
பங்களாதேஷ். இந்தியா அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்றது. இதில் நிகார் சுல்த்தான 32 ஓட்டங்களையும், ஷொர்னா அக்டேர் 19 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ரேணுகா சிங், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைபப்ற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா மகளிர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்ம்ரிதி மந்தானா 51(38) ஓட்டங்களையும், ஷபாலி வர்மா 26(28) ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் வெற்றி பெறுமணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்