இந்தியாவில், 6 வருடங்களுக்கு முன்னர் தான் புரிந்த குற்றத்திற்காக மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களினால் தாக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த நபரொருவர், மனித நேயம் கொண்ட மனிதனின் உதவியால் இன்று அவரின் வாழ்க்கை முற்றாக மாற்றமடைந்துள்ளது.
பொது மக்களினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை பாதுகாப்பாக மீட்ட மற்றுமொரு நபர், அவருக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கி அன்பினுடாக அவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு ஆதரவாக இருந்துள்ளார்.
மீட்கப்பட்ட நபர் தற்பொழுது வாடிக்கையாளர் சேவை நிர்வாகியாக பணி புரிந்து வருவதுடன், மாதந்தம் 18,000 ரூபா சம்பளத்தினை பெற்றுக் கொள்ளும் நிலைக்கு அவரின் வாழ்க்கை மாறியுள்ளது.
ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாம் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாகும்.