ஸ்ரீலங்கா கிரிக்கெட் கிரிக்கட்டிற்கான புதிய யாப்பு – அமைச்சரவை அனுமதி

உத்தேச ஸ்ரீலங்கா கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு
சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கைக்கமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.19 அன்று இடம்பெற்ற
அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, ஸ்ரீலங்கா கிரிக்கட்டிற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உத்தேச ஸ்ரீலங்கா கிரிக்கட்டிற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு
சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply