வெனிசுலா தேர்தல் முடிவால் வெடித்த வன்முறை

வெனிசுலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது பாதுகாப்புப்
படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசியுள்ளனர்.

வெனிசுலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 80 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 51.02 வீத வாக்குகளை மதுரோ பெற்றுள்ளதுடன் அவரை
எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் 44.02 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

எனினும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல்கள் சபையின் தலைவர் எல்விஸ் அமரோசோ ஜனாதிபதி மதுரோவின் நெருங்கிய நண்பர் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ் 73.2% வாக்குகளுடன் உறுதியாக வெற்றி பெற்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 11 வருடங்களாக ஆட்சியிலுள்ள நிக்கலஸ் மதுரோவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பாரிய
முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தேர்தல் ஊடாக தான் மீண்டும் தெரிவாகியுள்ளமை
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முழக்கம் என ஜனாதிபதி மதுரோ தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை மாலை ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய கராகஸில் இறங்கினர்,
சிலர் நகரைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள சேரிகளில் இருந்து மைல்கள் தூரம் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவித்த மறுநாளே வெனிசுலா தலைநகரில் போராட்டம் வெடித்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version