பொலிஸ் மா அதிபரை நியமிக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம்
அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய நிலையில் இன்று (30.07) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல்கள்
ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த 24 ஆம் திகதியன்று
உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 09 அடிப்படை உரிமை மீறல்
மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, தேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபராக நியமிக்கக் கோரி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அகலகட சிறிசுமண
தேரர் உட்பட பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பில் பேரணி ஒன்றை நடத்தியது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமான பேரணி கொழும்பு – கோட்டையில் உள்ள போ மரத்தை நோக்கி
சென்றது.

Social Share

Leave a Reply