ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று (31.07)படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன..

இஸ்மாயிலுடன் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டோர் மற்றும் கொலை எவ்வாறு இடம்பெற்றது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வருகின்றது.

இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமனோர் உயிரிழந்துள்ளதுடன் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தற்போது ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version